Ancient silver-faced Moolavar at the sacred pond — the original seat of divine power, worshipped since the era of kings.
மன்னர்கள் காலத்திலேருந்து வழிபடப்படும் பழமையான வெள்ளி முக அம்மன் — தெய்வீக சக்தியின் மூல இடம்.
Ancient stone shrine of Chinna Karuppu at the pond — younger guardian deity of the village.
குளக்கரையில் உள்ள சின்ன கருப்பு சன்னிதி — கிராமத்தின் இளைய காவல் தெய்வம்.
Ancient stone shrine of Peria Karuppu at the pond — elder guardian deity protecting the temple and village.
குளக்கரையில் உள்ள பெரிய கருப்பு சன்னிதி — கோவிலையும் கிராமத்தையும் காக்கும் மூத்த காவல் தெய்வம்.
Full statue of Arulmigu Sri Badra Kaliamman on the podium at the pond — resplendent with silver crown and festival jewels.
குளக்கரையில் மேடையில் வெள்ளி கிரீடம் மற்றும் ஆபரணங்களுடன் காட்சியளிக்கும் திருவுருவம்.
Together, they form Kali's divine law-and-order machinery: Chinna Karuppu manages daily peace, while Peria Karuppu delivers final judgment — ensuring the Goddess's protection covers every corner of the community.
இருவரும் சேர்ந்து காளி அம்மனின் தெய்வீக நீதி இயந்திரமாக செயல்படுகின்றனர் — சின்ன கருப்பு அன்றாட சமாதானத்தை காக்க, பெரிய கருப்பு இறுதி தீர்ப்பை வழங்க.
The magnificent Urchavar — the festival processional deity of Arulmigu Sri Badra Kaliamman enshrined inside the temple sanctum. Adorned with gold jewels, lotus garlands, diamond necklace and a golden crown, She radiates divine splendour during festival celebrations.
திருக்கோவில் உட்சன்னிதியில் வீற்றிருக்கும் பிரமாண்டமான உற்சவர் திருவுருவம். தங்க ஆபரணங்கள், தாமரை மாலைகள், வைர ஹாரம் மற்றும் தங்க கிரீடத்துடன் திருவிழாக் காலங்களில் தேஜோமயமாக காட்சியளிக்கிறார்.
✦ Daily poojas are performed at all seven shrines — three ancient pond shrines, three podium statues and the Urchavar inside the sanctum. Devotees are blessed to worship at each during their visit.
✦ பழமையான குளக்கரை சன்னிதிகள் மூன்றும், மேடை சன்னிதிகள் மூன்றும், உட்சன்னிதி உற்சவரும் — ஆக ஏழு சன்னிதிகளிலும் தினமும் பூஜை நடைபெறுகிறது.
📸 Share your temple photos via WhatsApp: +91 97870 53992 — best photos featured here
📸 உங்கள் கோவில் படங்களை WhatsApp செய்யுங்கள்: +91 97870 53992
| Account Nameகணக்கு பெயர் | SOWDARPATTI SRI BADRAKALIAMMAN KOIL TR |
| Bankவங்கி | State Bank of India (SBI) |
| Account No.கணக்கு எண் |
44302888769
(Current Account)(நடப்புக் கணக்கு)
|
| IFSC CodeIFSC குறியீடு | SBIN0015799 |
| Branchகிளை | Sowdarpatti |
Located in Sowdarpatti under the Thirumangalam Taluk of Madurai District, this sacred temple serves as the presiding deity shrine for Sowdarpatti and six surrounding villages.
The temple is home to Arulmigu Sri Badra Kaliamman — a living, ever-present deity of the Kali Yuga — whose blessings have protected and guided devotees across generations. This is an ancient temple of great antiquity, having undergone renovation and restoration works across many eras, and continues to stand today in its full glory.
From the times of the kings, Arulmigu Sri Badra Kaliamman has been revered as the kula deivam — the family deity — of over a thousand families across the region, bestowing her grace as both the ancestral guardian and the beloved personal deity of all who seek her.
மதுரை திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள சௌடார்பட்டி மற்றும் சுற்றியுள்ள ஆறு கிராமங்களுக்கு பாத்தியதைப்பட்ட இந்த திருத்தலம், கண்கண்ட கலியுக தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பத்ர காளியம்மன் அருளாசியுடன் உறையும் புனித தலமாகும்.
இக்கோவில் மிகவும் பழமையான, தொன்மையான கோவிலாகும். பல்வேறு காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இன்றும் சிறப்புடன் விளங்குகிறது.
மன்னர்கள் காலத்திலிருந்தே குலதெய்வமாக போற்றப்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளியம்மன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் அருள் புரிந்து வருகின்றார்.
Under the leadership of Thiru V.R.Venkatramanan, the dilapidated stone mandapam was completely demolished and a magnificent new mandapam was constructed. After centuries, the first grand Kumbabhishekam was celebrated.
தலைவர் திரு. V.R. வேங்கட்ரமனன் மற்றும் அன்பர்களின் முயற்சியால் பழைய மண்டபம் அகற்றி மண்டபம் உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்கு பிறகு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
The front mandapam was constructed and several renovation works were undertaken. The second Kumbabhishekam was celebrated grandly in the Nandana year (2012).
முன்மண்டபம் எழுப்பப்பட்டும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நந்தன (2012) ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
The foundation for the grand Maha Mandapam was laid in Hevilambi year (2017). The 2nd Chandi Yagam and Anna Danam were conducted. The Maha Mandapam and roof were completed and the 3rd Chandi Yagam celebrated in Subhakiruthu year (2022), with the first ever Mulaippari Vizha and Paal Kuda Vizha.
மிகப்பெரிய மகாமண்டப பணியை துவக்கி ஸ்திரமான அஸ்திவாரம் ஹேவிளம்பி 2017 ஆண்டு போடப்பட்டது. இரண்டாம் சண்டி யாகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. சுபகிருது 2022 வருடம் மூன்றாம் சண்டி யாகம், முதல் முறையாக முளைப்பாரி விழா, பால்குட விழா நடந்தது.
On Subhakiruthu Margazhi 1 (3.2.2023), divine command was received to create a vigraham. Stone from near Salem was carved at Tiruchirappalli into a magnificent 8-armed Vishnu-Durga form (Swayambu Arulmigu Badra Kaliamman) with Simha Vahanam, Panchayudham, Trishulam and Amuta Kalasam. The grand Nutana Ashtabandha Maha Kumbabhishekam was performed on 21.02.2024, with 30 Sivachariyars and scholars from temples across Tamil Nadu.
சுபகிருது வருடம் மை 20 (3.2.2023) வெள்ளி அன்று விக்கிரகம் செய்ய உத்தரவு கிடைக்கப்பெற்றது. சேலம் மாநகர் அருகில் இருந்து சிவலை வடிக்க கல் எடுத்து, திருச்சிராப்பள்ளி கருமண்டபம் சிற்பக்கூடத்தில் எட்டு கைகள், சிம்ம வாகனம், மகா விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள், திரிசூலம் தாங்கி நின்ற கோலத்தில் திருவடி காட்டி, அமுத கலசம், அபயஹஸ்தம்வுடன் பிரமாண்ட விக்கிரகம் செய்யப்பட்டது. 21.02.2024 புதன்கிழமை நாள் நூதன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 30 சிவாச்சாரியார்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களின் அர்ச்சகர்கள் வருகையுடன் அமோகமாக நடந்தது.
Real GPS: 9.813782°N, 77.876505°E
Sowdarpatti, Tamil Nadu 625704
Paste Google Maps iframe here using these coordinates
Google Maps iframe இங்கே சேர்க்கவும்.
Open in Google Maps → Google Maps-ல் திற →Arulmigu Sri Badra Kaliamman Temple proudly runs entirely on solar energy — installed in March 2026 by the temple trust, making it one of the first solar-powered temples in Madurai district.
அருள்மிகு ஸ்ரீ பத்ர காளியம்மன் திருக்கோவில் மார்ச் 2026 இல் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் முதல் சூரிய சக்தி கோவில்.